RUKMANI GANESAN E
4 साल 5 महीने पहले
மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு வணக்கம்,
1. இளமையும் இயற்கையும்!!!
நம்பிக்கையும் எதிர்காலமும்!!!
இளைஞர்கள் வாரம் ஒரு நாள் இயற்கைக்காக செலவிட வேண்டும். மரம் நடுதல், நீர் ஊற்றுதல், மரங்களை பராமரித்தல் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும். நம்புங்கள் வெற்றியடைவீர்கள், எதிர்காலத்தில் இந்தியா பசுமையான பாரதமாக அமைந்திடும்.
2. நீரின்றி அமையாது உலகு!!!
பல்வேறு குளங்கள் ஏரிகள் நீர் பாதைகள் அனைத்தும் அடையாளம் காணப்பட்டு புதுப்பிக்க வேண்டும். புதிய நீர்நிலைகளை அமைக்க வேண்டும். நம்நாட்டில் ஏகப்பட்ட நிலங்கள் மக்கள் குடியிருப்பு பகுதிக்கு வெளியில் தரிசு நிலங்களாகவும் பயன்பாடற்ற இடமாகவும் உள்ளது அத்தகைய பகுதிகளில் புதுப்பித்தல் நீர் நிலைகளை அமைக்கும் பட்சத்தில் நிலத்தடி நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும்.
3. அறிந்து கொள் இந்தியா!!!
இது இளைஞர்களின் இந்தியா!!!
நம் நாட்டின் இளைஞர்களுக்கு திறமைகளை வளர்க்கும் பயிற்சிப் பட்டறை நடத்த வேண்டும். மனம் ரீதியாக, உடல் ரீதியாக அவர்களின் திறமை சார்பான வழிகாட்டுதலை ஒவ்வொரு குக்கிராமங்கள் முதல் பெரு நகரங்களின் தெருக்கள் வரை நடத்த வேண்டும்.
நன்றி ஐயா!
पसंद
(7)
नापसन्द
(2)
जवाब दो
स्पैम की रिपोर्ट करें